வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்களுக்கு ஆல் அவுட்


வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில்  404 ரன்களுக்கு ஆல் அவுட்
x

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்

சட்டகிரேம்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி

இந்திய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்களுடன் (169 பந்து, 10 பவுண்டரி) களத்தில் உள்ளார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது. ஸ்ரேயாஸ் அய்யருடன் அஸ்வின் இணைந்து ஆடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 133.5 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.


Next Story