ஆசிய கோப்பை : பாகிஸ்தான் அணியின் 2 முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள் விலகல்
ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் 2 முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் விலகியுள்ளனர்.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஹரிஸ் ரவூப் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார். காயம் காரணமாக அவர் மீண்டும் விளையாடவில்லை. மற்றொரு வீரரான நசீம் ஷா அவரது கடைசி ஓவரை வீசும் போது காயமடைந்தார். இதனால் அவர் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேறினார்.
இந்நிலையில் மீதமுள்ள ஆசிய கோப்பை தொடரில் இருந்து நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் விலகியுள்ளனர். ஜமான் கான் மற்றும் ஷாநவாஸ் தஹானி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளார்.