ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு


ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
x

Image Tweeted By @OfficialSLC

ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுப்போட்டிக்கு முன்னேறி விட்டன.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் 4 அணிகளும் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும். முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுப்போட்டிக்கு முன்னேறி விட்டன. இந்த இரு அணிகளும் தலா 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இறுதிபோட்டி வாய்ப்பை இழந்த இந்தியா 1 வெற்றியுடன் 3-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. ஏற்கனவே இந்த இரு அணிகளும் இறுதிபோட்டிக்கு முன்னேறிவிட்டதால் இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது.


Next Story