உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகரிப்பு


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2023 9:30 AM GMT (Updated: 8 Jan 2023 9:35 AM GMT)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிபோட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.இருப்பினும் ஆஸ்திரேலிய - தென் ஆப்பிரிக்காஇடையேயான கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்திய அணிக்கு மீதம் 4 போட்டிகள் உள்ளன. 4 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.

இதில் இந்திய அணி 3-1 , அல்லது 3-0 என தொடரை கைபற்றினால் இந்திய அணி மற்ற அணிகளின் முடிவை சார்ந்திருக்காமல் ,இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம். ஆனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் மற்றும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவை சார்ந்திருக்க வேண்டும் .

அதாவது இலங்கை அணி 3வது இடத்தில் இருந்து வருகிறது . இலங்கை , நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் டெஸ்ட் நடைபெறவுள்ளது.இந்த போட்டிகளின் வெற்றி , தோல்வி முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமைய வேண்டும்.

புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா (75.56%) முதல் இடத்திலும், இந்தியா (58.93%) 2வது இடத்திலும், இலங்கை (53.33%) 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (48.72%) 4வது இடத்திலும், இங்கிலாந்து (46.97%) 5வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (40.91%) 6வது இடத்திலும், பாகிஸ்தான் (38.1%) 7வது இடத்திலும், நியூசிலாந்து (27.27%) 8வது இடத்திலும், வங்காளதேசம் (11.11%) 9வது இடத்திலும் உள்ளன.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப்போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.


Next Story