முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிப்பு - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு


முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிப்பு - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு
x

Image Courtesy : ANI

ஓய்வூதிய அதிகரிப்பின் மூலம் சுமார் 900 பேர் பயனடைவார்கள் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மும்பை,

பிசிசிஐ முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் போட்டி அதிகாரிகளின் மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று தெரிவித்துள்ளார். இந்த ஓய்வூதிய அதிகரிப்பின் மூலம் சுமார் 900 பேர் பயன் அடைவார்கள் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

சுமார் 75 சதவீத பணியாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் 100 சதவீதம் உயர்த்தப்படுவார்கள் எனவும் ஜெய் ஷா அறிவித்துள்ளார். பிசிசிஐ உச்ச கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தை (ஐசிஏ) பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஐசிஏ) நீண்ட கால கோரிக்கையாக இது இருந்து வந்தது.

மேலும் 25 முதல் தர போட்டிகளுக்கு குறைவாக விளையாடிய முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story