டெல்லி கேப்டன் டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் - ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை
கேப்டன் டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 34-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது. பின்னர் 145 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக டெல்லி அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால் டேவிட் வார்னருக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .