ரிஸ்வான் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: ஷாகித் அப்ரிடி


ரிஸ்வான் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: ஷாகித் அப்ரிடி
x

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானின் பேட்டிங் குறித்து ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

கராச்சி,

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.கேப்டன் பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்கள் சேர்க்கவில்லை. பாகிஸ்தான் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முகமது ரிஸ்வான் தான். முகமது ரிஸ்வான் தொடர்ந்து ரன்களை தொடக்க வீரராக குவித்து வருகிறார்.

ஆனால் முகமது ரிஸ்வானையே பலரும் விமர்சித்து வருகின்றனர். முகம்மது ரிஸ்வானின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக பலரும் சாடி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் . இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி கூறியதாவது:-

நீங்கள் பந்து வீச்சில் அல்லது பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். அந்த வகையில் ரிஸ்வான் மற்றும் பாபர் இரண்டு பேருமே அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார்கள். ஆனால் இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது. 11 பேரும் விளையாட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள்.

அதில் குறைந்த பட்சம் மூன்று வீரர்கள் ஆவது அணிக்கு ரன் சேர்க்க பங்களிப்பை கொடுக்க வேண்டும். ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை. அவர் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பாண்டில் மட்டும் ரிஸ்வான் 14 டி20 போட்டிகளில் 8 அரைசதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர் அசாம் தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.


Next Story