ஆஸ்திரேலிய மைதானங்களில் 200 ரன்கள் இலக்கை அடைய தினேஷ் கார்த்திக் உதவுவார் - முன்னாள் வீரர் பாராட்டு


ஆஸ்திரேலிய மைதானங்களில் 200 ரன்கள் இலக்கை அடைய தினேஷ் கார்த்திக் உதவுவார் - முன்னாள் வீரர் பாராட்டு
x

Image Courtesy : BCCI 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்.

மும்பை,

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது 37 வயதில் இந்திய அணிக்கு திரும்பி அசத்தி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாண்டு வருகிறார்.

குறிப்பாக கடைசி போட்டியில் இக்கட்டான நிலையில் களமிறங்கி அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த நிலையில் இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாட முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெக்ரா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது :

அனுபவமான வீரரான அவருக்கு போட்டி குறித்த நிறைய விஷயங்கள் தெரியும். தேர்வாளர்கள், அணி நிர்வாகம் அனைவரும் தற்போது அவரை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். கடைசி போட்டியில் அவர் அடித்த அரைசதம் அவருக்கு நிச்சயமாக நம்பிக்கையைத் தரும். அவர் மேலும் முன்னோக்கி செல்ல அவருக்கு இது உத்வேகத்தை அளிக்கும். ஆஸ்திரேலியாவில் 200 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களின் ஆட்டம் பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story