என்னுடைய பேட்டிங் பவருக்கு அதுதான் காரணம் என்று நினைக்கிறேன் - ஆட்ட நாயகன் பேட்டி


என்னுடைய பேட்டிங் பவருக்கு அதுதான் காரணம் என்று நினைக்கிறேன் - ஆட்ட நாயகன் பேட்டி
x

image courtesy: twitter/@mipaltan

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் ரோமாரியோ ஷெபெர்ட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லியை 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.

மும்பை அணியின் இந்த வெற்றிக்கு அன்ரிச் நோர்டியா வீசிய கடைசி ஓவரில் 32 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ரொமாரியோ ஷெபெர்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்தது வீண் போகவில்லை என்று தெரிவிக்கும் அவர் சில இந்திய உணவுகளை சாப்பிடுவதே தம்முடைய பேட்டிங் பவருக்கு காரணம் என்று கலகலப்பாக கூறியுள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"என்னுடைய கடினமான உழைப்புக்கு பரிசு கிடைத்துள்ளது. வலைப்பயிற்சியில் நான் அதிகமான கடின உழைப்பை போட்டுள்ளேன். கடைசி நேரத்தில் பேட்டிங் செய்யும்போது நீங்கள் தெளிவான மனநிலையை கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டிம் டேவிட் நீங்கள் பந்தை எதிர்கொண்டு அடியுங்கள் என்று உற்சாகத்தை கொடுத்தார்.

பந்தை அடிப்பதற்கான சரியான இடத்தில் நான் இருந்தேன். நான் எப்போதும் ஒருதலைபட்சமாக செயல்பட விரும்பாததால் 50 - 50 பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் விளையாட முயற்சிக்கிறேன். பேட்டிங் செய்வதற்கான பவர் அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் வருகிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக சில இந்திய உணவுகளை சாப்பிடுகிறேன்" என்று கூறினார்.


Next Story