இந்திய அணிக்கு கேப்டன் தேவைப்பட்டால் ஹர்திக் பாண்டியா பொருத்தமாக இருப்பார் - மைக்கேல் வாகன்


இந்திய அணிக்கு கேப்டன் தேவைப்பட்டால் ஹர்திக் பாண்டியா பொருத்தமாக இருப்பார் - மைக்கேல் வாகன்
x

Image Courtesy : Twitter Hardik Pandya 

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பல முன்னாள் வீரர்களும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

மும்பை,

ஐபிஎல் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடித்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார்.

முதல் அணியாக பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தட்டி சென்றுள்ளது. லீக் போட்டிகளில் அணியின் தொடர் வெற்றிகளுக்கு ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான கேப்டன்சி முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இறுதி போட்டியிலும் கேப்டன்சி உடன் சேர்த்து பேட்டிங், பந்துவீச்சு என ஹர்திக் பாண்டியா அனைத்திலும் அசத்தினார். இதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பல முன்னாள் வீரர்களும் பாராட்டி வந்த வண்ணம் உள்ளனர்.

பாண்டியாவின் கேப்டன்சி தோனி கேப்டன்சி பாணி போன்று இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஏற்கனவே பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கெல் வாகன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " அறிமுக அணியான குஜராத் மிக பெரிய சாதனை படைத்துள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு கேப்டன் தேவைப்பட்டால் ஹர்திக் பாண்டியாவை கடந்து நான் இன்னொரு வரை பார்க்கமாட்டேன்" என தெரிவித்துள்ளார்.


Next Story