இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: பேட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சிக்கல்


இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: பேட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சிக்கல்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 6 Aug 2023 1:45 AM IST (Updated: 6 Aug 2023 12:07 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் அந்த அணியின் டெஸ்ட் கேப்டனும், முன்னனி வேகப்பந்துவீச்சாளருமான பேட் கம்ம்ன்ஸ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது, பேட் கம்மின்ஸ்சுக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயத்துக்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


Next Story