ஐ.பி.எல். 2024: முக்கிய பந்துவீச்சாளர் விலகல்.. குஜராத் அணிக்கு பின்னடைவு


ஐ.பி.எல். 2024: முக்கிய பந்துவீச்சாளர் விலகல்.. குஜராத் அணிக்கு பின்னடைவு
x

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். தொடரை பொறுத்தவரை சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களை கொண்ட அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.

இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வந்த நிலையில், அவரை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி, தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது.

இந்த நிலையில், குஜராத் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, காயம் காரணமாக தற்போது நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார்.

2023 உலகக்கோப்பை தொடரில் ஷமி விளையாடியபோது அவரது இடது கணுக்கால் காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் அவர் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது. காயத்துக்கு விரைவில் அவர் அறுவைச்சிகிச்சை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இல்லாத குஜராத் அணியில் தற்போது மற்றுமொரு முக்கிய வீரர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Next Story