ஐபிஎல் : மும்பை அணியை ஆதரிக்கும் பெங்களூரு அணி : காரணம் என்ன ?


ஐபிஎல் : மும்பை அணியை ஆதரிக்கும் பெங்களூரு அணி : காரணம் என்ன ?
x
தினத்தந்தி 21 May 2022 12:28 PM GMT (Updated: 21 May 2022 12:46 PM GMT)

இன்று நடைபெறும் 69-வது லீக் போட்டியில் டெல்லி -மும்பை அணிகள் மோதுகின்றன


மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெறும் 69-வது லீக் போட்டியில் டெல்லி -மும்பை அணிகள் மோதுகின்றன .இந்த போட்டி டெல்லி அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும் .

டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளியை எட்டுவதுடன் 'ரன்-ரேட்' அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விடும். ஏனெனில் ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் பெங்களூரு அணியின் ரன் ரேட்டை (-0.253) விட டெல்லி அணியின் ரன்-ரேட் (+0.255) உயர்வாக இருக்கிறது. மாறாக டெல்லி தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும். அதேநேரத்தில் பெங்களூரு அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கும். எனவே இந்த ஆட்டம் டெல்லி அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும்.

இதனால் இந்த போட்டியின் முடிவு பெங்களூரு அணிக்கும் முக்கியமாகும் .இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் இன்று மும்பை அணியின் வெற்றிக்கு காத்திருக்கிறார்கள் .

இந்நிலையில் பெங்களூரு அணி டுவிட்டரில் சுவாரசிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது .அந்த பதிவில் ;

அனைத்து பெங்களூரு அணி ரசிகர்கள் , கேப்டன் என நாங்கள் அனைவரும் இன்றிரவு மும்பை அணியை ஆதரிக்கிறோம்.என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது




Related Tags :
Next Story