ஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தான் - குஜராத் இடையேயான போட்டியில் பிடித்த வேடிக்கையான கேட்ச் - வீடியோ
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது.
ஆமதாபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தது. பின்னர் 178 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வேடிக்கையான கேட்ச்
இந்த போட்டியில் விருத்திமான் சஹாவும், சுப்மன் கில்லும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். அப்போது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் 2-வது பந்தை பவுண்டரிக்கு ஓட விட்ட சஹா (4 ரன்) அடுத்த பந்தை தூக்கினார்.
பந்து பேட்டின் விளிம்பில் பட்டு தலைக்கு மேலே எழும்பியது. ஒரே நேரத்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ஜூரெல் ஆகியோர் கேட்ச் செய்ய முயன்று, முட்டிமோதிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக சாம்சனின் கையில் பட்டு தெறித்த பந்தை அருகில் நின்ற டிரென்ட் பவுல்ட் கேட்ச் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Missed that Boulty special? Got you pic.twitter.com/w4oofIU8Rw
— Rajasthan Royals (@rajasthanroyals) April 16, 2023