ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமனம்!


ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமனம்!
x
தினத்தந்தி 12 Nov 2022 10:57 AM GMT (Updated: 12 Nov 2022 10:57 AM GMT)

ஜெய் ஷா ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

துபாய்,

இந்திய கிரிக்கெட் வாரிய(பிசிசிஐ) செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)-இன் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உறுப்பினர் நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது.

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு பின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட உள்ளார். மேலும், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் அடுத்த கூட்டம் ஜெய் ஷா தலைமையில் மார்ச் 2023 இல் நடைபெறும் என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெறும் ஐசிசி வாரியக் கூட்டங்களில் கலந்துகொள்ள, ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் தலைமையிலான பிசிசிஐ குழு ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story