ஐபிஎல் நாக் அவுட்களுக்கு தகுதி பெறாதததால் அப்பாவிடம் உதை வாங்கிய ஷிகர் தவான் ரீல் வீடியோ


ஐபிஎல் நாக் அவுட்களுக்கு தகுதி பெறாதததால் அப்பாவிடம் உதை வாங்கிய ஷிகர் தவான் ரீல் வீடியோ
x
தினத்தந்தி 26 May 2022 9:37 AM GMT (Updated: 26 May 2022 9:47 AM GMT)

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத பஞ்சாப் வீரர் தவானை அவரது அப்பா உதைத்து தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மும்பை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் தொடக்க வீரர் ஷிகர் தவான். தனது சிறப்பான ஆட்டத்தால் தனக்கென ரசிகர் பெருங்கூட்டதை வைத்துள்ள இவர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தை மட்டும் 1.1 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

நடைபெற்ற ஐபிஎல் 14 லீக் ஆட்டங்களிலும் விளையாடிய அவர் 453 ரன்கள் எடுத்திருந்தார். அவரது அதிகபட்ச ரன் 88* ஆக உள்ளது. ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 120 ஆகவும், அவரது சராசரியாக 38.33 ஆகவும் இருப்பது அணிக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது.

ஷிகர் தவான் தொடக்க வீரராக களமிறங்கி பஞ்சாப் கிங்ஸ் அணியை மயங்க் அகர்வால் வழிநடத்தி இருந்த நிலையில், அந்த அணி 14 லீக் ஆட்டங்களில் 7 வெற்றி 7 தோல்விகளுடன் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்தது. அந்த அணி இன்னும் ஒரு ஆட்டத்தை நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், வாய்ப்பை தவற விட்டு சோகத்துடன் வெளியேறியது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிகர் தவான் அவ்வப்போது நகைச்சுவையான வீடியோக்களை பதிவு செய்து தனது ரசிகர்களை குஷிப்படுத்துவண்டு. அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், தவானின் தந்தை தனது மகனை அடித்து உதைத்து மிரட்டுகிறார். அப்போது அவரது குடும்பத்தினர் அவரது தந்தையை தடுக்க முற்படுகின்றனர். ஆனால், அவர் தொடர்ந்து தவானை அடித்து மிதிக்கிறார்.

ஷிகர் தவான் அந்த வீடியோவின் கேப்ஷனில், "நாக் அவுட்களுக்கு தகுதி பெறாதததால் என் அப்பாவால் நாக் அவுட் செய்யப்பட்டேன்" என்று சிரிப்பலையுடன் ரீல் வீடியோ ஒன்றை பதிவேற்றி உள்ளார். தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Knock out by my dad for not qualifying for knock outs



Next Story