கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இன்று மோதல்


கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இன்று மோதல்
x

image courtesy: BCCI Women twitter

https://www.dailythanthi.com/Sports/Cricket/20-over-cricket-against-australia-indian-womens-team-defeat-858133

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது.

மும்பை,

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் தாலியா மெக்ராத் அணியை வழிநடத்துகிறார்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. இந்திய அணியின் பவுலிங் மெச்சும் வகையில் இல்லை. இந்திய அணி பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை முடிக்க மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story