கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு


கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 16 April 2023 9:43 AM GMT (Updated: 16 April 2023 9:48 AM GMT)

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். மேலும் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நிதிஷ் ராணா செயல்படுகிறார்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் ரன் வேட்டை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story