இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிப்பு


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின்  பயிற்சியாளர்  ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிப்பு
x

Image Courtesy : Twitter

தினத்தந்தி 20 May 2022 12:06 PM GMT (Updated: 20 May 2022 12:07 PM GMT)

மேலும் 1 ஆண்டிற்கு ரமேஷ் பவாரை பயிற்சியாளராக நீட்டித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் ரமேஷ் பவார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 44 வயதாகும் இவர் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.

இவரது ஒரு ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இவரை மேலும் 1 ஆண்டிற்கு பயிற்சியாளராக நீட்டித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் ரமேஷ் பவார் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை போட்டி வரை அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

அதன் பின்னர் மிதாலி ராஜ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டபிள்யூ.வி.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரமேஷ் பவார் கடந்த ஆண்டு மிகவும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவரது பயிற்சி காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story