இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்
x

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்கா,

வங்காளதேசம் செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி மிர்புரில் நடக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.


Next Story