சுப்மன் கில், புஜாரா அபார சதம்..! 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்து 513 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா


சுப்மன் கில், புஜாரா அபார சதம்..!  2வது இன்னிங்சை டிக்ளேர் செய்து 513 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
x
தினத்தந்தி 16 Dec 2022 10:00 AM GMT (Updated: 16 Dec 2022 10:12 AM GMT)

2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தபோது இந்தியா 2வது இன்னிங்க்சை டிக்ளேர் செய்தது

சாட்டிங்காம்,

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர். பின்வரிசையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். குல்பித் யாதவ் 40 ரன்கள் என மாஸ்கட்ட இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 100 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை மளமளவென இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். வங்காளதேச அணி பாலோ ஆன் ஆன நிலையிலும் இந்திய அணி தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.

கே.எல்.ராகுல் , சுப்மன் கில்தொடக்க வீரர்களாக ஆடினார். இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 23 ரன்களில் வெளியேறினார். இதனை புஜாரா , கில் இனைந்து நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து ஆடிய கில் சதமடித்து அசத்தினார்.இதுடெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதனை தொடர்ந்து 110 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய புஜாரா சதமடித்து அசத்தினார்.

2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தபோது இந்தியா 2வது இன்னிங்க்சை டிக்ளேர் செய்தது . இதனால் முன்னிலை ரன்களுடன் வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story