இந்த முறை பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் : சிராஜ் நம்பிக்கை


இந்த முறை பெங்களூரு அணி  ஐபிஎல் கோப்பையை வெல்லும்  :  சிராஜ் நம்பிக்கை
x

Image Courtesy : BCCI / IPL 

தினத்தந்தி 24 May 2022 11:28 AM GMT (Updated: 24 May 2022 11:33 AM GMT)

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடந்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் 5 முதல் 10 இடங்களை பெற்றன.

இந்நிலையில் பெங்களூரு அணியின் வேக பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறியதாவது ;

பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்."ஆர்சிபி சிறப்பாக விளையாடி பட்டத்தை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் மூன்று முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம். ஆனால் விரைவில் பட்டத்தை வெல்வோம் என உறுதியாக நம்புகிறேன். அந்த நேரம் வந்துவிட்டது. இது போட்டியின் முக்கியமான கட்டமாகும், நாங்கள் சிறப்பாக செயல்பட தயாராக உள்ளோம்

எனக்கு நல்ல சீசன் இல்லை (13 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள்). நான் என்னை ஊக்கப்படுத்துகிறேன், மேலும் பிளே ஆப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்,"


Related Tags :
Next Story