இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் இதுதான்: வெளிப்படையாக பேசிய முகமது ஷமி


இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் இதுதான்:  வெளிப்படையாக பேசிய  முகமது ஷமி
x

இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து முகமது ஷமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அம்ரோகா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவில் இந்திய அணி வீரர் முகமது ஷமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தோல்விக்கான காரணம் குறித்து ஷமி கூறியதாவது ,

நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காததுதான் காரணம். நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்திருந்தால், அந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை எளிதாக கட்டுப்படுத்தியிருப்போம். என்றார்.


Next Story