டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேலம் அணி பேட்டிங் தேர்வு


டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேலம் அணி பேட்டிங் தேர்வு
x

இன்று நடைபெறும் சேலம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சேலம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்ததால் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங்கைதேர்வு செய்தது.



Next Story