டி.என்.பி.எல். கிரிக்கெட் : சேலம் -திருச்சி அணிகள் இன்று மோதல்


டி.என்.பி.எல். கிரிக்கெட் : சேலம் -திருச்சி அணிகள் இன்று மோதல்
x

இன்று நடைபெறும் 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் -திருச்சி வாரியர்ஸ் மோதுகின்றன.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடைபெறும் 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் -திருச்சி வாரியர்ஸ் மோதுகின்றன. இரு அணிகளும் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.


Next Story