டிஎன்பிஎல் : நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் அபார வெற்றி
18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.
திண்டுக்கல்,
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின . இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது.
இதில் டாஸ் வென்ற ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீ ரெரஞ்சன், சூர்யபிரகாஷ் களம் இறங்கினர். இதில் ஸ்ரீ நெரஞ்சன் 13 ரன்னும், சூர்யபிரகாஷ் 10 ரன்னும் அடுத்து களம் இறங்கிய அருண் குமார் 2 ரன், அருண் கார்த்திக் 4 ரன், லக்ஷய் ஜெய்ன் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் நெல்லை அணி 49 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களம் இறங்கிய சோனு யாதவ் சிறுது நேரம் நிலைத்து நின்று ஆடி 35 ரன் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் நெல்லை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் தரப்பில் புவனேஷ்வரன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் ஆட உள்ளது.
தொடர்ந்து 125 ரன்கள் இலக்குடன் திருப்பூர் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ராதா கிருஷ்ணன் , துஷார் ரஹேஜா களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ராதா கிருஷ்ணன் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து துஷார் ரஹேஜா 49 ரன்களில் வெளியேறினார்.பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
இதனால் 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.