விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 4-வது வெற்றி...!


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 4-வது வெற்றி...!
x

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

ஆலூர்,

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. தமிழக அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் 128 ரன்களும், சாய் சுதர்சன் 67 ரன்களும், ஷாருக்கான் 46 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன களம் இறங்கிய ஹரியான அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 28.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் 6 வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து தமிழக அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணிக்கு இது 4வது வெற்றி ஆகும். 1 ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன் மூலம் தமிழக அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.


Next Story