விஜய் ஷங்கர் , சாய் சுதர்சன் அதிரடி அரைசதம் ...! குஜராத் அணி 204 ரன்கள் குவிப்பு


விஜய் ஷங்கர் , சாய் சுதர்சன் அதிரடி அரைசதம் ...! குஜராத் அணி 204 ரன்கள் குவிப்பு
x

தொடர்ந்து 205 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடுகிறது.

ஆமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி குஜராத் முதலில் பேட்டிங் செய்தது .இன்றைய ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியாவுக்கு பதில் , குஜராத் அணியின் கேப்டனாக ரஷித் கான் செய்லபடுகிறார்.

தொடக்க வீரர்களாக விருத்திமன் சஹா , சுப்மன் கில்ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் சஹா 17 ரன்களில் வெளியேறினார். பின்னர் சாய் சுதர்சன் களமிறங்கினார்.

கில் , சாய் சுதர்சன் இருவரும் இனைந்து சிறப்பாக விளையாடினர். நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.

அணியின் ஸ்கோர் 100 ஆக இருந்த போது கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அபினவ் மனோகர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.பின்னர் அவர் 53 ரன்களில் வெளியேறினார்.கடைசியில் விஜய் ஷங்கர் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார்.அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் , சுயாஸ் சர்மா 1விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 205 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடுகிறது.


Next Story