பென் ஸ்டோக்ஸுக்கு பதில் யார்.. ஏலத்தில் சிஎஸ்கேவின் வியூகம் என்ன..? - இந்திய முன்னாள் வீரர் கருத்து


பென் ஸ்டோக்ஸுக்கு பதில் யார்.. ஏலத்தில் சிஎஸ்கேவின் வியூகம் என்ன..? -  இந்திய முன்னாள் வீரர் கருத்து
x

Image Courtesy: @ChennaiIPL

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.

இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை அணி, முன்னணி வீரரான பென் ஸ்டோக்சை விடுவித்தது. பணிச்சுமை காரணமாக ஸ்டோக்ஸ் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மினி ஏலத்தில் சிஎஸ்கே வியூகம் என்ன என்று, தான் கருதுவதை இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சென்னை அணிக்கு ஒரு ஆல்ரவுண்டர் தேவை. பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக ரச்சினாக இருக்கலாம் அல்லது அவர்கள் டேரில் மிட்செல்லை தேர்வு செய்யக்கூடும். சிஎஸ்கேவில் ரவீந்திர ஜடேஜா, பிரசாந்த் சோலங்கி, மொயின் அலி மற்றும் மிட்செல் சான்ட்னர் இருப்பதால் அந்த அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்படாமல் போகலாம்.

பேட்டிங் பிரிவில் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக மனீஷ் பாண்டே அல்லது கருண் நாயருக்கு அவர்கள் குறிவைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story