தொடரை வெல்லப்போவது யார்..? - கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்..!
3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடைபெற உள்ளது.
பிரிட்ஜ்டவுன்,
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்தநிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்க உள்ளது.
Related Tags :
Next Story