பெண்கள் டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா


பெண்கள் டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா
x

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 புள்ளிகளை பெற்றாலும், ரன் ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

கேப்டவுன்,

பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா, வங்காளதேச அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 30 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இலக்கை நோக்கி விளையாடியது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லாவ்ரா, டாஸ்மின் இருவரும் சிறப்பாக விளையாடி இலக்கை விரட்டிப்படித்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க வங்காளதேச பந்துவீச்சாளர்கள் பல்வேறு யுக்தியை பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 4 புள்ளிகளை பெற்றாலும், ரன் ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.


Next Story