உலகக்கோப்பை கிரிக்கெட்; கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்...!
x

நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை பெங்களூருவில் எதிர்கொள்கிறது.

இந்திய அணி 8 லீக் ஆட்டங்களில் ஆடி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் நெதர்லாந்து அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்க நெதர்லாந்து கடுமையாக முயற்சிக்கும். இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.


Next Story