உலகக்கோப்பை தொடக்க போட்டி: "பார்வையாளர்கள் எங்கே" என இங்கி. கிரிக்கெட் வீராங்கனை கேள்வி


உலகக்கோப்பை தொடக்க போட்டி: பார்வையாளர்கள் எங்கே என இங்கி. கிரிக்கெட் வீராங்கனை கேள்வி
x

image credit: @mufaddal_vohra

தினத்தந்தி 5 Oct 2023 6:01 PM IST (Updated: 5 Oct 2023 6:08 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதி வரும் உலகக்கோப்பை தொடக்க போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை

அகமதாபாத்,

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்றுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

உலகக்கோப்பை தொடரின் தொடக்க நாளான இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போட்டியை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. .

இந்த நிலையில், முதல் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் இருக்கைகள் காலியாக இடக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, மைதானத்தில் ரசிகர்கள் இல்லாததால் "பார்வையாளர்கள் எங்கே" என இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியெல்லி வியாட், தனது எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.


Next Story