உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானின் தோல்வி...இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசம்..! தற்போதைய நிலை என்ன ?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானின் தோல்வி...இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசம்..! தற்போதைய நிலை என்ன ?
x

Image Courtesy : PTI 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

மும்பை,

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு தகர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.அந்த அணி இறுதிப்போட்டி வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.தற்போதுள்ள புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிடாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளன.

இந்திய அணிக்கு மீதம் 6 போட்டிகள் உள்ளன. இதில் 2 போட்டிகள் வங்கதேசத்திலும், 4 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணிலும் விளையாடவுள்ளது. இதில் இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம்.இந்தியா விளையாட உள்ள வங்காளதேச அணி , ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

மறுபுறம் முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இவை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளது. இதில் நிச்சயம் ஏதேனும் ஒரு அணி தோல்வியடையும். அப்போது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

இதனிடையே இலங்கை அணி 3வது இடத்தில் இருந்து வருகிறது. அந்த அணி வரும் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்தால் வெளியேறிவிடும்.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப்போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.


Next Story