உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை : முதல் இடத்தை பிடித்த தென் ஆப்பிரிக்க அணி..!!


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை : முதல் இடத்தை பிடித்த தென் ஆப்பிரிக்க அணி..!!
x

Image Courtesy : ICC

இந்திய அணி இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

துபாய்,

இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று நிறைவடைந்தது. நேற்று முடிந்த 2-வது டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை (2021- 2023) வெளியாகியுள்ளது. அணிகளின் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பட்டியலில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அந்த வகையில் நேற்று தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி 70 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 71.43 சதவீத புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 54.17 சதவீதத்துடன் இலங்கை அணி இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. 4-வது இடத்தில் பாகிஸ்தான் அணி 52.38 சதவீத புள்ளியுடன் உள்ளது. இந்திய அணி 52.08 சதவீத புள்ளியுடன் இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இறுதியில் இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை மற்றும் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை வெவ்வேறானது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story