கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து: 3-வது வெற்றியை பெறும் முனைப்பில் மும்பை கவுகாத்தி அணியை இன்று சந்திக்கிறது + "||" + ISL Football: In the initiative to win 3rd Mumbai

ஐ.எஸ்.எல்.கால்பந்து: 3-வது வெற்றியை பெறும் முனைப்பில் மும்பை கவுகாத்தி அணியை இன்று சந்திக்கிறது

ஐ.எஸ்.எல்.கால்பந்து:
3-வது வெற்றியை பெறும் முனைப்பில் மும்பை
கவுகாத்தி அணியை இன்று சந்திக்கிறது
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கவுகாத்தி,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி கண்டுள்ள கவுகாத்தி அணி புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. 6 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி கண்டுள்ள மும்பை அணி 5-வது இடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண கவுகாத்தி அணி முயற்சிக்கும். அதேநேரத்தில் 3-வது வெற்றியை ருசித்து முதல் 4 இடங்களுக்குள் நுழைய மும்பை அணி போராடும். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் மும்பை அணி 3 முறையும், கவுகாத்தி அணி 2 முறையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.அதிகம் வாசிக்கப்பட்டவை