கால்பந்து

2019 ஆசிய கால்பந்து கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி + "||" + AFC Asian Cup 2019 Draw: India in Group A with United Arab Emirates, Thailand and Bahrain

2019 ஆசிய கால்பந்து கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி

2019 ஆசிய கால்பந்து கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி
2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஆசிய கால்பந்து போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. #AFCGroup
துபாய்,

சர்வதேச அளவில் ஆண்களுக்கான 17வது ஆசிய கால்பந்து போட்டி அடுத்த வருடம் ஜனவரி 5-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை ஐக்கிய அரபுகள் நாட்டில் நடக்கவிருக்கிறது. 

இந்திய அணியுடன் சேர்த்து மொத்தம் 24 அணிகள் மோதும் இந்த போட்டியை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. இந்நிலையில் கால்பந்து போட்டியில் விளையாடும் அணிகளின் பிரிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 6 பிரிவுகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்திய அணியுடன் சேர்த்து ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸ், தாய்லாந்து மற்றும் பக்ரைன் போன்ற அணிகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.