கால்பந்து

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள் + "||" + World Cup football Today's matches

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் துனிசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
* முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் துனிசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சூப்பர் பார்மில் உள்ள இங்கிலாந்து, அறிமுக அணியான பனாமாவையும் பந்தாடி 2-வது சுற்றை எட்டும் முனைப்புடன் தயாராகி வருகிறது. முந்தைய ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

* ‘எச்’ பிரிவில் ஆசிய அணியான ஜப்பான் தனது முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவுக்கும், ஆப்பிரிக்க அணியான செனகல் 2-1 என்ற கோல் கணக்கில் போலந்துக்கும் அதிர்ச்சி அளித்தது. இப்போது ஜப்பான்-செனகல் அணிகள் 2-வது வெற்றிக்காக கோதாவில் குதிக்கின்றன. இதில் வாகை சூடும் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலின்றி உறுதியாகி விடும்.

* போலந்து, கொலம்பியா அணிகளை பொறுத்தவரை அந்த அணிகளுக்கு இது வாழ்வா-சாவா? போட்டியாகும். இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு 2-வது சுற்று கனவு ஏறக்குறைய தகர்ந்து போய் விடும்.