கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் சீன அணி வெற்றி + "||" + Chinese team wins Asian Cup football match

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் சீன அணி வெற்றி

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் சீன அணி வெற்றி
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், கிர்கிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சீன அணி வெற்றிபெற்றது.
அபுதாபி,

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் சீன அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்சை சாய்த்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஈராக்-வியட்நாம் (இரவு 7 மணி), சவூதி அரேபியா-வடகொரியா (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.