கால்பந்து

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி-கோவா ஆட்டம் ‘டிரா’ + "||" + Indian Super League football: Delhi-Goa match 'Draw'

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி-கோவா ஆட்டம் ‘டிரா’

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி-கோவா ஆட்டம் ‘டிரா’
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், டெல்லி-கோவா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
புதுடெல்லி,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 14 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 7 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் தாக்குதலுக்கு 40 பேர் பலி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் - ‘பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட உறுதி’
காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட உறுதி எடுத்துள்ளோம் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
2. மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
3. அணியில் தேர்வு செய்யாததால் டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: கவுதம் கம்பீர் கொந்தளிப்பு
அணியில் தேர்வு செய்யாததால் டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-கவுகாத்தி ஆட்டம் டிரா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
5. டெல்லியில் தொடரும் கடும் குளிர்: 24 ரயில்கள் தாமதம்
டெல்லியில் கடும் பனிமூட்டத்துடன் கடும் குளிரும் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக 24 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...