தொடர்ந்து கால்பந்து விளையாட்டு வீரர்களின் வீடுகளில் கொள்ளையடித்த வினோத திருடர்கள்


தொடர்ந்து கால்பந்து விளையாட்டு வீரர்களின் வீடுகளில் கொள்ளையடித்த வினோத திருடர்கள்
x
தினத்தந்தி 2 May 2019 11:13 AM GMT (Updated: 2 May 2019 11:13 AM GMT)

கால்பந்து விளையாட்டு வீரர்களை இலக்காக கொண்டு அவர்களின் வீடுகளில் புகுந்து வினோத திருடர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.

மேட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஒன்றில் எப்.சி. பார்சிலோனா மற்றும் லிவர்பூல் அணிகள் விளையாடின.  இந்த போட்டியில் லிவர்பூல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியது.

ஆனால் இந்த வெற்றி அந்த அணியில் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.  ஏனெனில் பிரேசில் நாட்டை சேர்ந்த நடுகள வீரரான ஆர்தர் மெலோ என்பவரின் வீட்டில் புகுந்து திருடர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆர்தர் விளையாடி கொண்டிருந்த அந்த இரவில் அவரது வீட்டுக்கு 2 வினோத திருடர்கள் சென்றனர்.  அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே புகுந்தனர்.  அங்கிருந்த ஆர்தரின் சகோதரர் கழுத்தில் ஸ்குரு டிரைவர் ஒன்றை வைத்து மிரட்டியுள்ளனர்.  இதன்பின் அங்கிருந்த ரோலெக்ஸ் ரக கடிகாரம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை திருடி விட்டு அதே ஜன்னல் வழியே தப்பியோடி விட்டனர்.

சமீப மாதங்களில் ஆர்தர் தவிர்த்து, எப்.சி. பார்சிலோனா கால்பந்து அணியை சேர்ந்த மால்கம், போயெடெங், ஜெரார்டு பிக்கி மற்றும் ஜோர்டி ஆல்பா ஆகிய கால்பந்து விளையாட்டு வீரர்களின் வீடுகளிலும் வினோத திருடர்கள் இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story