கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி - சுனில் சேத்ரி சாதனை


கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி - சுனில் சேத்ரி சாதனை
x
தினத்தந்தி 5 Jun 2019 10:22 PM GMT (Updated: 5 Jun 2019 10:22 PM GMT)

கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி சாதனை ஒன்றை படைத்தார்.

புரிராம்,

47-வது கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தாய்லாந்தில் உள்ள புரிராமில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, குராகோவை எதிர்கொண்டது. புதிய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வழிகாட்டுதலில் இந்திய அணி விளையாடிய முதல் ஆட்டம் இதுவாகும். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் சுனில் சேத்ரி (108 ஆட்டம்) இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டியில் ஆடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு இந்திய வீரர் பாய்சூங் பூட்டியா 107 சர்வதேச போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் குராகோவிடம் தோல்வி கண்டது. குராகோ அணியில் போனாவாசியா 15-வது நிமிடத்திலும், ஹூய் 18-வது நிமிடத்திலும், பாகுனா 34-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய தரப்பில் 32-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்தார். சர்வதேச போட்டியில் அவர் அடித்த 68-வது கோல் இதுவாகும். இந்த போட்டியில் இந்திய அணியில் அமர்ஜித் சிங் உள்பட 6 பேர் அறிமுக வீரர்களாக களம் கண்டனர்.


Next Story