கால்பந்து

சர்வதேச போட்டிகளில் விளையாட மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை + "||" + Lionel Messi given three month suspension after explosive Copa America outburst

சர்வதேச போட்டிகளில் விளையாட மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை

சர்வதேச போட்டிகளில் விளையாட மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை
பிரபல கால்பந்து நட்சத்திரமான மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அசுன்சியன்,

பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில்  3 மாதங்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பிரேசில் அணி வென்றது. 

இந்த தொடரில் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த  மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது" என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். சிலிக்கு எதிரான போட்டியில், தனக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,  வெண்கல பதக்கத்தையும் வாங்க மெஸ்ஸி மறுப்பு தெரிவித்தார்.  

இதன் தொடர்ச்சியாக மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.    $50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும், தடையை எதிர்த்து மெஸ்ஸி மற்றும் அர்ஜெண்டினா அணி நிர்வாகம் மேல் முறையீடு செய்ய முடியும். 

மேல் முறையீட்டில் ஒருவேளை மெஸ்ஸி மீதான  தடை நீக்கப்படாவிட்டால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிலி, மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனியுடன் நடைபெறவுள்ள போட்டிகளை அவர் தவறவிடக் கூடும்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரேசில் : அமேசானில் 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் காட்டுத்தீ
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது.
2. பிரேசிலில் 16 பயணிகளுடன் பேருந்தை கடத்தியவரை சுட்டுக்கொன்றது போலீஸ்
பிரேசிலில் 16 பயணிகளுடன் பேருந்தை கடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
3. அணி வீரர்களுடன் இரவு விருந்துக்கு சென்ற பிரபல கால்பந்து வீரருக்கு அடி உதை
மத்திய தரைக்கடல் தீவான இபிசாவில், பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அணி வீரர்களுடன் இரவு விருந்துக்கு சென்றிருந்தபோது கிளப்பில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
4. பிரேசில் சிறையில் பயங்கர கலவரம்: 57 பேர் பலி
பிரேசில் சிறையில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் சிறைக்கைதிகள் 57 பேர் பலியாகினர்.
5. பிரேசில் சிறைகளில் கலவரம்: 40 கைதிகள் உயிரிழப்பு
பிரேசில் சிறைகளில் கலவரம் ஏற்பட்டதில் 40 கைதிகள் உயிரிழந்தனர்.