கால்பந்து

நட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா அணியிடம் பிரேசில் தோல்வி + "||" + Friendship Football: Brazil lose to Argentina

நட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா அணியிடம் பிரேசில் தோல்வி

நட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா அணியிடம் பிரேசில் தோல்வி
நட்புறவு கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணியிடம் பிரேசில் தோல்வியடைந்தது.
ரியாத்,

பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சவூதி அரேபியாவில் நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பான இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. பந்து பிரேசில் அணியின் கட்டுப்பாட்டில் அதிக நேரம் (66 சதவீதம்) இருந்தாலும் அந்த அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 4 போட்டியில் விளையாட விதிக்கப்பட்ட தடை முடிந்து அர்ஜென்டினா அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 13-வது நிமிடத்தில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.


கடந்த ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை. 2013-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணியின் மோசமான செயல்பாடு இதுவாகும். கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோல்வி கண்ட அர்ஜென்டினா அணி அதற்கு பதிலடி கொடுத்தது.