ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 24 Nov 2019 11:14 PM GMT (Updated: 24 Nov 2019 11:14 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோத உள்ளன.

சென்னை,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி. அணியை (இரவு 7.30 மணி) சந்திக்கிறது. 4-வது ஆட்டத்தில் ஆடும் சென்னை அணி ஒரு டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. சென்னை அணி முதல் வெற்றியை ருசிக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

புனேயில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் கோலை நோக்கி அடித்த 3 வாய்ப்புகளும் வீணானது.

Next Story