ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது கோவா


ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது கோவா
x
தினத்தந்தி 1 Dec 2019 11:29 PM GMT (Updated: 1 Dec 2019 11:29 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து கோவா அணி தப்பியது.

கொச்சி,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய கேரளா பிளாஸ்டர்ஸ்- எப்.சி. கோவா அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் 52-வது நிமிடத்தில் கோவா வீரர் மோர்டடா பால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆடிய போதிலும் கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) கோவாவின் லெனி ரோட்ரிக்ஸ் கோல் போட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

Next Story