கொரோனா காரணமாக கால்பந்து போட்டிகளில் விலக்கு - சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு


கொரோனா காரணமாக கால்பந்து போட்டிகளில் விலக்கு -  சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 May 2020 6:53 AM GMT (Updated: 8 May 2020 6:53 AM GMT)

கொரோனா காரணமாக கால்பந்து போட்டிகளில் ஐந்து மாற்று வீரர்கள் களமிறக்கலாம் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா காரணமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட உலக விளையாட்டுகள் முடங்கி போயுள்ளது. தற்போது மீண்டும் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில், கொரோனா காரணமாக முடங்கிய பல்வேறு கால்பந்து தொடர்கள் விரைவில் துவங்க உள்ளன. ஜெர்மனியின் முன்னணி பண்டஸ்லிகா கால்பந்து தொடர் இம்மாதத்தில் துவங்கப்பட உள்ளது. 

இந்நிலையில்,  அடுத்தடுத்து போட்டிகள் நடப்பதால் வீரர்கள் கூடுதல் நெருக்கடி ஏற்படும். இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (ஐ.எப்.ஏ.பி.,) சார்பில், மாற்று வீரர்கள் விதியில் தற்காலிக மாற்றம் செய்ய, சர்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் ('பிபா') ஆலோசித்தது.

இதன் படி, இனிமேல் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி தரப்படும். இந்த மாற்றங்கள் 2020-2021 சீசன் முழுவதும் இந்த விதி அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story