ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வித்தியாசமானது; மன ரீதியாக தயாராக வேண்டும்-லியோனல் மெஸ்சி


ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வித்தியாசமானது; மன ரீதியாக தயாராக வேண்டும்-லியோனல் மெஸ்சி
x
தினத்தந்தி 28 May 2020 5:20 AM GMT (Updated: 28 May 2020 8:47 AM GMT)

லியோனல் மெஸ்சி லா லிகாவுக்கு போட்டிக்காக காத்திருக்கிறார், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதில் அவர் விருப்பம் கொண்டுள்ளார்.

பாரீஸ்

பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி  ஸ்பெயினில் கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பல வாரங்களுக்குப் பிறகு பார்சிலோனா அணியுடன் மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார்,  லா லிகா ஜூன் 12 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் அடிடாஸ் இணையதளத்திற்கு அளித்தபேட்டியில் மெஸ்சி கூறியதாவது:-

இந்த ஆண்டு நாம் எதைப் விட்டுச் செல்கிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க முடியாது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது நல்லது. மீண்டும் லா லிகா அணியில் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மூடிய கதவுகளுக்குப் பின்னால் விளையாடுவது வித்தியாசமானது.

பார்வையாளர்கள் இன்றி விளையாடுவது அன்றாட பயிற்சிக்குச் செல்வது போல, உங்கள் அணியினரைப் பார்ப்பது, உங்கள் முதல் சில ஆட்டங்களில் விளையாடுவது போன்றது. முதலில் இது விசித்திரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் விளையாட எதிர்பார்த்திருக்கிறேன்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் விளையாடுவது "தொடர்ச்சியான சவால்களைக் குறிக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வித்தியாசமானது.அதற்கு மன ரீதியாக தயாராக வேண்டும் என கூறினார். 

Next Story