கால்பந்து

ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி: 2022-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கிறது + "||" + Asian Cup Women's Football Tournament: India to be held in 2022

ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி: 2022-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கிறது

ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி: 2022-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கிறது
ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி, இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி, 

2022-ம் ஆண்டுக்கான 20-வது ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்த இந்தியா, சீன தைபே, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தன. இதனை பரிசீலனை செய்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பெண்கள் கமிட்டி இந்தியாவுக்கு இந்த போட்டியை நடத்தும் உரிமையை வழங்கலாம் என்று சிபாரிசு செய்து இருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட ஆசிய கால்பந்து கூட்டமைப்பு 2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது. 

1979-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடைபெற இருப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த முறை 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இனிமேல் 12 அணிகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு கடைசி தகுதி சுற்று போட்டியாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்த போட்டி ஆர்வமுள்ள கால்பந்து வீராங்கனைகளை ஈர்க்கும் என்றும் நமது நாட்டு பெண்கள் கால்பந்தில் முழுமையான சமூக புரட்சியை ஏற்படுத்தும்‘ என்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது
ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது