கொரோனா அச்சுறுத்தலால் 2022,2023-ம் ஆண்டுக்கான கால்பந்து தகுதி சுற்று போட்டிகள் தள்ளிவைப்பு + "||" + COVID-19 Impact -- FIFA World Cup 2022 / Asian Cup 2023 joint qualifiers postponed to 2021
கொரோனா அச்சுறுத்தலால் 2022,2023-ம் ஆண்டுக்கான கால்பந்து தகுதி சுற்று போட்டிகள் தள்ளிவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுக்கான தகுதி சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டலத்திற்கான தகுதி சுற்றும், 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருந்தது.
கொரோனா அச்சுறுத்தலால் இவ்விரு தகுதி சுற்று போட்டிகளும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச கால்பந்து சம்மேளனமும், ஆசிய கால்பந்து கூட்டமைப்பும் கூட்டாக அறிவித்துள்ளன. திருத்தப்பட்ட போட்டி அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.